籌款 9月15日 2024 – 10月1日 2024 關於籌款

தமிழ்த்தாத்தாவின் "என் சரிதம்": Biography of...

  • Main
  • தமிழ்த்தாத்தாவின் "என்...

தமிழ்த்தாத்தாவின் "என் சரிதம்": Biography of Dr.U. V. Swaminatha Iyer (Tamil Edition)

சாமிநாதய்யர் உ.வே (Author), panchanathan v (Editor), Vinoth John (Introduction)
你有多喜歡這本書?
文件的質量如何?
下載本書進行質量評估
下載文件的質量如何?
ஆங்கிலம் படித்தால் இவ்வுலகில் சுகமாக வாழலாம்
சமஸ்கிருதம் படித்தால் வானுலகில் சுகமாக வாழலாம்
ஆனால்
தமிழ் படித்தால் இரண்டுலகிலும் சுகமாக வாழலாம்
இதைச்சொன்னவர் உ.வே.சாமிநாதய்யர்
தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படும் உ.வே.சாமிநாதய்யர் என்ற மாமனிதர் பிறந்திருக்காவிட்டால் சிலப்பதிகாரம் என்ற நூல் தமிழர்க்கு தெரியாமலே போயிருக்கும் மணிமேகலை மண்ணுக்குள் மண்ணாய் போயிருக்கும் இப்படி அழிவின் விளிம்பில் இருந்த பல அரிய தமிழ் நூல்களை காப்பாற்றி தமிழுக்கு அளித்தவர் சாமிநாதர் அவர்கள்.
இன்று சங்க இலக்கியங்களை நாம் அறிந்திருப்பதற்க்கு சாமிநாதர் அவர்களின் தளராத உழைப்பு தான் காரணம். சுவடியில் இருந்து நூல்களை அவர் அப்படியே பதிப்பிக்கவில்லை, காரணம் பெரும்பாலான சுவடிகள் சிதைந்த நிலையில் இருந்தன அதை அப்படியே பதிப்பித்தால் படிப்பவர்கள் பொருள் உணர சிரமப்படுவார்கள் எனவே சிதைந்திருந்த சுவடிகளில் உள்ள செய்திகளையும் பொருட்களையும் மிகந்த சிரமைப்பட்டு கண்டறிந்து அதை முழுமையாக்கி வெளியிட்டார்.
தமிழுக்கு சாமிநாதர் ஆற்றிய பணிகள் ஏராளம் பொருளாதார ரீதியாக பல இன்னல்களை அனுபவித்தாலும் அவர் தன் தமிழ்ப்பணியை விடவில்லை பல நூல்களை தொடர்ந்து பதிப்பித்து வந்தார்.
தன் வாழ்க்கையை சரித்திரமாக்கியவர்கள் சிலரே அதில் ஒருவர் தான் தமிழ்த்தாத்தா தன் வாழ்க்கை தானே “என் சரிதம்” என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார் அதை படிக்கும் பொழுது நாம் அறியாத பல் விசயங்களை அறிந்து கொள்ளலாம் குறிப்பாக அக்கால் திண்னை கல்வி முறை எப்படி இருந்தது ஆசிரியர்கள் மாணாக்கர்களுக்கு எப்படி கல்வி பயிற்று வித்தார்கள் ஒலைச்சுவடிகளின் வகைகள் என்ன அதை எப்படி பதிபிக்க வேண்டும் போன்ற பல சுவையான சுவாரஸ்யாமான தகவல்களை நமக்கு அளிக்கிறார் மேலும் ஆகமங்கள் என்ற பெயரில் தமிழர்களின் அரும்பெரும் கொடையான தமிழ்ச்சுவடிகள் எவ்வாறெல்லாம் அழிக்கப்பட்டது என்று அவர் விளக்கும் போது, ‘சுவடிகளை அல்ல உங்கள் மடைமையான ஆகமங்களை தான் தீயிட்டு கொளுத்த வேண்டும்’, என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.
சங்க இலக்கியங்கள் மட்டுமல்ல “என் சரிதம்” என்ற நூலும் அவர் தமிழுக்கு அளித்த பெருங்கொடை தான்
體積:
1
年:
1950
版本:
1
出版商:
சாமிநாதய்யர் உ.வே
語言:
tamil
頁數:
902
系列:
Public Domain – CC0
文件:
PDF, 1.79 MB
IPFS:
CID , CID Blake2b
tamil, 1950
線上閱讀
轉換進行中
轉換為 失敗

最常見的術語